close
Choose your channels

திருமணத்திற்கு பின் நடிகர் பிரபுவின் மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

Thursday, July 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பதும், இதில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிரபுவுக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளார் என்பதும் அவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிரபு மகள் ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. மெல்ட்ஸ் டெசர்ட் (meltz.dessertz) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள ஐஸ்வர்யா, ஆர்டரின் பேரில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்கள் வழங்கி வருகிறார். இதற்காக அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் ஆரம்பித்து தான் தயாரித்த விதவிதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அவர் தயாரித்த கேக்களின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பிறந்த நாள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அவர் கேக் தயாரித்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.