close
Choose your channels

ஆர்.கே.நகர் தேர்தல்: நடிகர் கவுண்டமணி எச்சரிக்கை

Monday, December 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கம் போல் இந்த தேர்தலிலும் சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் செய்யவுள்ளதாக ஒரு வதந்தி ஒருசில இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்கலிலும் பரவி வருகிறது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் கவுண்டமணி, 'நான் எந்தக் கட்சியையும் சாராதவன், ஆர்.கே.நகரில் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரித்து நான் பிரசாரம் செய்யப்போவதாக பரப்பப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை' என்று கூறியுள்ளார். மேலும் நான் அதிமுகவுக்கு பரப்புரை செய்வதாக அவதூறு பரப்பினால் சட்டபடி நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதே நேரத்தில் தினகரன் ஆதரவாளரான நடிகர் செந்தில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.