close
Choose your channels

தமிழ் வெப் சீரிஸில் நடிகர் சரத்குமார்… வெளியீட்டு தகவல்!

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் “இறை” எனும் தமிழ் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின் வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட திரைப்படமான “பொன்னியின் செல்வன்“ திரைப்படத்தில் தற்போது நடிகர் சரத்குமார் நடித்துவருகிறார். இதைத்தவிர “தூங்கா நகரம்“, “கடாரம் கொண்டான்“ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் “இறை’‘ எனும் தமிழ் வெப் சீரிஸில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் சீரிஸை அவருடைய மனைவி ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

த்ரில்லர் கதையம்சம்கொண்ட இந்த வெப் சீரிஸ் குடும்ப ஆடியன்ஸ்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் சீரிஸ் தெலுங்கில் பிரபல ஒடிடி தளமாக இருந்துவரும் “ஆஹா“ ஒடிடி தளம் மூலம் வெளியிடப்பட இருக்கிறது. ஆஹா ஒடிடி தளம் சமீபகாலமாக தமிழில் நேரடியாகத் திரைப்படங்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகர் சரத்குமார் இயக்குநர் ராஜேஷ் செல்வா கூட்டணியில் உருவாகி இருக்கும் “இறை“ வெப் சீரிஸ் வரும் 18 ஆம் தேதி வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.