close
Choose your channels

பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்யும் வினய்: யார் அந்த நடிகை?

Monday, April 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் வினய் பிரபல நடிகையை காதலித்து திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

’உன்னாலே உன்னாலே’ ’ஜெயம்கொண்டான்’ ’மிரட்டல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும், ’துப்பறிவாளன்’ ’டாக்டர்’ ’எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்தவர் நடிகர் வினய். இவருக்கும் நடிகை விமலா ராமனுக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது என்றும் விரைவில் திருமணம் செய்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

’ராமன் தேடிய சீதை’ உள்பட ஒரு சில தமிழ் படத்திலும், பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை விமலா ராமன். வினய்-விமலா ராமன் காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.