close
Choose your channels

நடிகர் வினித்தின் டீன் ஏஜ் மகள் புகைப்படம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்..!

Monday, March 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் கடந்த 90களில் நாயகனாக நடித்த நடிகர் வினித்தின் டீன் ஏஜ் மகள் புகைப்படம் திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் ’ஆவாரம்பூ’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் வினீத். இதனை அடுத்து அவர் ’ஜாதி மல்லி’ ’புதிய முகம்’ ’ஜென்டில்மேன்’ ’காதல் தேசம்’ ’தேவதை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ உள்பட அவரது கேரக்டர்கள் ரசிகர்கள் மனதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார் என்பதும் ஒருசில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் வினீத் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிசிலா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை தற்போது 17 வயது டீன் ஏஜ் பெண்ணாக உள்ளார்.

சமீபத்தில் வினீத் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து நடிகர் வினித்திற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். கூடிய விரைவில் வினீத்தின் மகள் நடிக்க வருவாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் வினித்தின் மகள் தனது தந்தையை போலவே ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.