close
Choose your channels

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு மூன்று சகோதரர்களா? அபூர்வ புகைப்படங்கள்!

Thursday, July 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அட்டக்கத்தி’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பதும் அதன் பின்னர் அவர் ’பண்ணையாரும் பத்மினியும்’ ’திருடன் போலீஸ்’ ’காக்கா முட்டை’ ’மனிதன்’ ’தர்மதுரை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் ’கனா’ திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத ஒரு திரைப்படமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என்பதும் அவரது புகைப்படங்கள் குறித்து அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் என்றும் அவர்களில் இரண்டு சகோதரர்கள் எதிர்பாராவிதமாக இறந்து விட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் 12 வயது இருக்கும் போதே அவருடைய மூத்த சகோதரர் இறந்து விட்டார் என்றும் காதல் தோல்வி காரணமாக அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவது சகோதரர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து கைநிறைய சம்பாதித்து வந்த நிலையில் திடீரென சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்றும் அதன் பின்னர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்கு சென்றதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.