close
Choose your channels

பிளஸ் 2 தேர்வில் நடிகை தேவயானி மகள் இவ்வளவு மதிப்பெண்களா? குவியும் வாழ்த்துக்கள்..!

Wednesday, May 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தேவயானியின் மகள் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அவருடைய மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 90களில் இருந்தவர் நடிகை தேவயானி. அஜித்துடன் ‘காதல் கோட்டை’, விஜய்யுடன் ‘பிரெண்ட்ஸ்’ ஆகிய படங்கள் உள்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்தார் என்பதும் திரைப்படங்களில் மட்டுமின்றி ’கோலங்கள்’ உட்பட பல சீரியல்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’மாரி’ என்ற சீரியலில் முத்துப்பேச்சி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா மற்றும் பிரியங்கா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை தேவயானி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தேவயானியின் மூத்த மகள் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதிய நிலையில் அவர் மொத்தம் 492 மதிப்பெண் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.