close
Choose your channels

கடற்கரையில் ஹாட் செல்பி… வைரலாகும் பிரபல நடிகை புகைப்படம்!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் “கேடி“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா டி குரூஸ். பின்னர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “நண்பன்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஒல்லி பெல்லி“ பாடலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட நடிகை இலியானா தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாகவே வலம் வந்தார்.

தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவந்த நடிகை இலியானா பாலிவுட்டில் “பர்ஃபி“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். இதனால் தற்போது இந்தி சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாகவே வலம்வருகிறார். இந்நிலையில் நடிகை இலியானா தற்போது தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து “கோஸ்ட்“ திரைப்படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டுவரும் நடிகை இலியானா அவ்வபோது தனது பிகினி புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிறத்தில் பிகினி அணிந்திருக்கும் செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.