close
Choose your channels

நடிகை காஜலின் மகிழ்ச்சி மந்திரம்? நீச்சல் குளத்தில் துள்ளிக் குதிக்கும் புகைப்படம் வைரல்!

Wednesday, August 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். க்யூட்டான சிரிப்பாலும், திறமையான நடிப்பாலும் தொடர்ந்து முன்னணி இடத்தைப் பிடித்து இருக்கும் இவர் தற்போது பாலிவுட்டில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்தும் உள்ள திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு தண்ணீரை வாரி இறைக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதோடு எனது மகிழ்ச்சிக்கான மந்திரம் இதுதான் என்பது போன்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டு உள்ளார். நடிகை காஜல் பதிவிட்ட நீச்சல் குளப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் பிரபல நடிகரான சிரஞ்சீவியுடன் இணைந்து “ஆச்சார்யா” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் “இந்தியன் 2” மற்றும் “ஹே சினாமிகா”, “பாரிஸ் பாரிஸ்“, “கோஸ்டி” போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட “உமா” எனும் திரைப்படத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.