close
Choose your channels

திடீரென ஆன்மீக பாதைக்கு மாறிய கிளாமர் நடிகை கிரண்.. வைரல் புகைப்படங்கள்..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் நாயகியாகவும் கிளாமர் கேரக்டரில் நடித்த நடிகை கிரண் திடீரென ஆன்மீகப் பாதையில் சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் சரண் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். இதனை அடுத்து அஜித் நடித்த ’வில்லன்’ விஜய் நடித்த ’திருமலை’ கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாகவும் பல படங்களில் கிளாமர் கேரக்டர்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் இவர் தனக்கென ஒரு இணையதளத்தை தொடங்கி அதே கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கிரண் திடீரென ஆன்மீக பாதைக்கு திரும்பி உள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இவர் சமீபத்தில் திருப்பதி சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.