close
Choose your channels

வெண்மையோடு சேர்ந்த மென்மை… நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Monday, October 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிப்புத் துறையில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார்.

இதனால் விளம்பரப் படங்கள் தற்போது சினிமா என்று படு பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த “பிரண்ட்ஷிப்“ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்தத் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதைத்தொடர்ந்து முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் “கூகுள் குட்டப்பன்“ திரைப்படத்தில் நடிகை லாஸ்லியாக கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படத்தில் தற்போது லாஸ்லியா நடிக்க இருப்பது குறித்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகை லாஸ்லியா சினிமாவைத் தவிர சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். அந்த வகையில் புதுப்புது போட்டோ ஷுட்களை நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

அந்த வகையில் வெண்மை கலந்த வெளிர் நீல நிறத்தில் ஆடையணிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தில் நடிகை லாஸ்லியா பார்ப்பதற்கே மென்மையும் வெண்மையும் கலந்து மார்டன் லுக்கில் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் கமெண்டுகளோடு வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.