close
Choose your channels

முழு நடிகையா மாறிட்டிங்க: 'டப் மாஷ்' புகழ் நடிகைக்கு குவியும் லைக்ஸ்கள்!

Wednesday, January 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டப்மாஸ் மூலம் புகழ்பெற்று அந்த புகழின் காரணமாக நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் மிருணாளினி என்பது தெரிந்ததே. இவர் விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தில் விலைமாது வேடத்தில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்

இதனை அடுத்து தற்போது அவர் ’நகல்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வா ஜோடியாக இவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த மிருணாளினி தற்போது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இதுவரை டீசண்டான புகைப்படங்களை மட்டும் பதிவு செய்து வந்த மிருணாளினி, திடீரென கவர்ச்சியாக பதிவு செய்த இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் ’இப்போதுதான் நீங்கள் முழு நடிகையா மாறிட்டீங்க’ என்று பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். கிளாமரான உடையில் போஸ் மிருணாளினி கொடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.