close
Choose your channels

உங்களுக்கு வயசு ஆகுமா? ஆகாதா? மேக்கப் இல்லாத நதியா போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நதியா நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நிலையில் மேக்கப் இல்லாமல் சிவப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

நடிகை நதியாவுக்கு தற்போது 56 வயது ஆகிறது என்றாலும் அவர் இன்னும் டீன் ஏஜ் பெண் போல சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருக்கிறார் என்பது அவ்வப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

கடந்த 1985 ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நதியா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். அதன் பிறகு மீண்டும் ’எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகிய நதியா, தற்போதும், பிஸியான நடிகையாக உள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ள நதியா அவ்வப்போது வொர்க்-அவுட் செய்யும் வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் நவம்பர் சிவப்பு காஸ்டியூமில் உள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேக்கப் இல்லாமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ’நிரந்தர அழகி’ ’தேவதை’ 'உங்களுக்கு வயசு ஆகுமா? ஆகாதா?’ போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.