பணமழையில் ப்ரியா ஆனந்த்: வைரலாகும் புகைப்படம்!
தமிழ் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். பிளாக் காமெடி வெப்சீரிஸ் ஆக உருவாகி வரும் இந்த தொடரில் முகம்மது அயூப் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெப்சீரிஸ் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ப்ரியா ஆனந்த் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 2000 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிந்து உட்கார்ந்திருப்பது, பணமழையில் அவர் நனைந்து இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
’ப்ரியா ஆனந்த்’ நடிப்பில் கடந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியின் ’எல்கேஜி’ மற்றும் துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் கன்னடத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மூன்றின் படப்பிடிப்புகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.