'சிங்கம்' பட பாணியில் போதை மருந்து சப்ளை: நடிகை ராகினி திவேதி அதிர்ச்சி வாக்குமூலம்

கடந்த சில நாட்களாக கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இதுகுறித்து வழக்கில் நடிகை ராகிணி திவேதி சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் இன்னொரு பிரபல நடிகையிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் அவரிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வாக்குமூலம் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ’ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 33 வயது சம்பா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூர்யா நடித்த ’சிங்கம் 2’ படத்தின் பாணியில் ஆப்பிரிக்காவிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து உள்ளூரில் உள்ள பிரபலங்களிடம் சம்பா போதை மருந்துகளை சப்ளை செய்துள்ளது ராகினி திவேதியின் வாக்குமூலம் மூலம் தெரியவந்தது.

மேலும் திரை உலகினர் கலந்துகொண்ட விருந்துகளில் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளிலும் சம்பா என்பவர் போதை பொருளை சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில பிரபலங்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஏ.ஆர்.ரஹ்மான், சச்சினை துணைக்கு அழைத்த விஜய் ரசிகர்கள்: மீண்டும் வைரலாகும் போஸ்டர்கள்

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக எம்ஜிஆர் போன்று விஜய்யை உருவகப்படுத்திய போஸ்டர்கள்

சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.3000 கோடியில் திட்டங்கள்!

சென்னையின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய உலக வங்கி உதவியுடன் ரூ.3000 கோடியில் திட்டங்களுக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும்

மைனா நந்தினியின் கர்ப்பிணி தோற்ற போட்டோஷூட்: இணையத்தில் வைரல்

சரவணன் மீனாட்சி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை மைனா நந்தினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது தெரிந்ததே.

5 ஆண்டுகளுக்கு பின் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்!

'நேரம்' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்

தமிழ் திரையுலகில் திடீரென கிளம்பிய இந்தி எதிர்ப்பு: வைரலாகும் புகைப்படங்கள்

இந்தியா முழுவதும் பேசக் கூடிய மொழியாக இந்தி இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி எதிர்ப்புக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.