close
Choose your channels

மைனா நந்தினியின் கர்ப்பிணி தோற்ற போட்டோஷூட்: இணையத்தில் வைரல்

Sunday, September 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணன் மீனாட்சி உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை மைனா நந்தினி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பது தெரிந்ததே. அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் மைனா நந்தினி கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பம் ஆனார் என்பதும் அவர் கர்ப்பமான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் மைனா நந்தினி அவரது கணவர் யோகேஷ்வரன், நாத்தனார், மாமியார் ஆகியோர் டான்ஸ் ஆடிய வீடியோவை ரசிகர்கள் வியந்து பார்த்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர் கிட்டத்தட்ட முழு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளார். விதவிதமான போஸ்களில், உடைகளில் கர்ப்பிணி தோற்றத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.