இணையத்தில் பரவிய வதந்திக்கு விளக்கமளித்த நடிகை ரேகா

  • IndiaGlitz, [Monday,February 12 2018]

பாரதிராஜா இயக்கிய 'கடலோர கவிதைகள்' படத்தில் அறிமுகமான நடிகை ரேகா, அதன்  பின்னர் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், புன்னகை மன்னன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கேணி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நடிகை ரேகாவின் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு நடிகை ரேகா விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி.

இவ்வாறு நடிகை ரேகா தனது மகள் குறித்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார்.

More News

விஜய் ரீலீல் செய்ததை ரியலில் செய்து காட்டிய கமல்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் அவருக்கு வெளிநாட்டில் பாராட்டு விழா ஒன்று நடைபெறும் காட்சி ஒன்று இருக்கும். இந்த காட்சியில் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொள்வார்.

ரஜினி, தனுஷ், அனிருத் பங்கேற்ற திருமண விழா

நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் - ஸ்வேதா திருமணம் இன்று சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

துப்பறிவாளராக ரீஎண்ட்ரி ஆகும் தேசிய விருது பட இயக்குனர்

சேரன், 'சென்னையில் ஒரு நாள் மற்றும் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை' ஆகிய படங்களுக்கு பின்னர் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினியின் நோக்கம் குறித்து ஹார்வர்டு பல்கலையில் பேசிய கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை முறைப்படி கட்சி ஆரம்பித்து தொடங்கவுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு

கமல் ஆரம்பித்துள்ள இணையதளத்தின் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்று பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று அவர் புதிய இணையதளம் ஒன்றை 'நாளை நமதே' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார்.