close
Choose your channels

கமல் ஆரம்பித்துள்ள இணையதளத்தின் பெயர் என்ன தெரியுமா?

Sunday, February 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல் ஆரம்பித்துள்ள இணையதளத்தின் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்று பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று அவர் புதிய இணையதளம் ஒன்றை 'நாளை நமதே' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார். கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே. இணைவதற்க்கு என்று இந்த இணையதளம் குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த இணையதளத்தில் தன்னார்வலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இணையலாம் என்று கமல் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், சிஎஸ்ஈஆர், என்ஜிஓ, அடுக்குமாடி குடியிருப்பு என 4 பிரிவுகளில் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கல்வி, தொழில் சுற்றுச்சூழல், வேளாண் துறை, நீர் மேலாண்மை, உள்ளிட்ட துறைகளில் பதிவு செய்யலாம் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

http://naalainamadhe.maiam.com/ என்ற முகவரியில் இயங்கி வரும் இந்த இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர். கட்சி தொடங்குவதற்கு முன்னர் கமல் ஆரம்பித்துள்ள இந்த இணையதளம் பெரும் வரவேற்பினை பொதுமக்களிடையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.