விஜய் ரீலீல் செய்ததை ரியலில் செய்து காட்டிய கமல்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் அவருக்கு வெளிநாட்டில் பாராட்டு விழா ஒன்று நடைபெறும் காட்சி ஒன்று இருக்கும். இந்த காட்சியில் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து அந்த விழாவில் கலந்து கொள்வார். பொதுவாக வெளிநாட்டு நிகழ்ச்சி என்றாலே கோட், சூட் அணிந்து செல்பவர்கள் மத்தியில் விஜய், வேட்டி சட்டை அணிந்து வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த காட்சி திரையில் தோன்றும்போது மிகப்பெரிய கைதட்டலை பெற்றது.
இந்த நிலையில் விஜய் ரீலீல் செய்த இந்த காட்சியை உலகநாயகன் கமல்ஹாசன் ரியலில் செய்து காட்டியுள்ளார். ஆம், இன்று காலை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலையில் உரை நிகழ்த்திய கமல், வேஷ்டி சட்டை அணிந்து தமிழர்களின் பாரம்பரிய உடையை உலகிற்கே பறைசாற்றியுள்ளார்.
வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதிலும் ஒரு உண்மையான தமிழன் என்ற உணர்வை உடையின் மூலம் வெளிப்படுத்திய கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தமிழர்கள் மத்தியில் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.