close
Choose your channels

பாவாடை தாவணியில் ரோஜா: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

தமிழ் சினிமாவில் கடந்த 90கள் மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என அன்றைய பிரபல நடிகர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஜோடியாக நடித்தவர் என்பதும் அது மட்டுமின்றி நாயகிக்கு முக்கியத்துவம் தந்த படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ஆர் கே செல்வமணியால் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட ரோஜா, அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சினிமாவில் இருந்து விலகி, தீவிர அரசியலில் இருக்கும் ரோஜா ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக உள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாவாடை தாவணி காஸ்டியூமில் நடிகை ரோஜா இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். 90களின் கனவு கன்னியாக இருந்த நடிகை ரோஜா, பாவாடை தாவணியில் இப்போதும் அழகாகவே இருக்கிறார் என்றும், வயதும், உடல் எடையும் கூடினாலும் அவருக்கு எந்த உடையும் பொருத்தமாகத் தான் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.