விருது விழாவில் நடிகை சமந்தா… இணையத்தில் தீயாய் பரவும் கிளாமர் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,March 11 2022]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சமந்தா தற்போது வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்களிடையே பிரபலமாகி இருக்கிறார். அந்த வகையில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை சமந்தா “தி பேமிலி மேன் 2“ வெப் சீரிஸ் மூலம் இந்தியா முழுக்கவே அறியப்படும் நடிகையாக மாறிப்போனார். இதைத்தொடர்ந்து மீண்டும் வெப் சீரிஸ், ஒரு ஹாலிவுட் திரைப்படம் என்று சினிமாவில் பிசியாக வலம்வரும் அவர் மும்பையில் நடைபெற்ற “கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்ட்ஸ்“ எனும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவிற்காக நடிகை சமந்தா அணிந்திருந்த உடை தற்போது நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

லோ லெக் லைன் மற்றும் ஸ்டெப் கட்டிங் வைத்திருக்கும் பச்சை கவுன் உடையை அணிந்திருந்த நடிகை சமந்தா ரெட் கார்பெட்டில் படு ஸ்டைலிஷாகக் காணப்பட்டார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா சோஷியல் மீடியாவில் அதிகம் கவனிக்கப்படும் ஒரு மனிதராக இருந்து வருகிறார். அவரைப் பின்பற்றும் ரசிகர்களும் ஏராளம் என்பதால் நடிகை சமந்தாவின் ரெட் கார்ப்பெட் உடை தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அவருடைய பச்சை உடையைப் பார்த்த சிலர் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்ற அதே வேளையில் இவ்வளவு கவர்ச்சியா? என்று ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

சந்தானம் படத்தின் ஜோடியாகும் அருண்விஜய் பட நாயகி!

அருண்விஜய் நடித்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 

இந்த உலகமே மேத்தமெட்டிக்ஸ்ல தான் இயங்குது: 'குதிரைவால்' டிரைலர்

இந்த உலகமே மேத்தமெட்டிக்ஸ்ல தான் இயங்குகிறது என்ற வசனத்துடன் பா ரஞ்சித் தயாரித்துள்ள 'குதிரைவால்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

மாசக்கடைசியில இவன் தான் சோறு போடுவான்: ஓட்டல் முதலாளிக்கு நன்றி சொன்ன லோகேஷ் கனகராஜ்

கடந்த 2010 களில் வறுமையில் இருந்த போது இவன் தான் எனக்கு சோறு போடுவான் என ஓட்டல் முதலாளியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து அவருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்

இன்னும் ஒரே மாதத்தில் முடிவடையும் சிவகார்த்திகேயன் அடுத்த படம்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ' டான்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான 'அயலான்' படமும் விரைவில் ரிலீசாக உள்ளது

யாராலும் ரஜினி ஆக முடியாது: 'ரஜினி' படத்தில் நடிக்கும் ஹீரோ

ரஜினி ரசிகராக 'ரஜினி' என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தில் நடித்து வரும் ஹீரோ ஒருவர், 'யாராலும் இனி ரஜினி ஆக முடியாது' என்று தெரிவித்துள்ளார்.