close
Choose your channels

இன்னும் ஒரே மாதத்தில் முடிவடையும் சிவகார்த்திகேயன் அடுத்த படம்!

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’ டான்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திரைப்படமான ’அயலான்’ படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 20’ என்ற படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் ’எஸ்கே 20’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார் என்பதும் தமன் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

காரைக்குடி, சென்னை, புதுவை மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ ’அயலான்’ மற்றும் ’எஸ்கே 20’ ஆகிய மூன்று படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.