close
Choose your channels

இந்த உலகமே மேத்தமெட்டிக்ஸ்ல தான் இயங்குது: 'குதிரைவால்' டிரைலர்

Thursday, March 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த உலகமே மேத்தமெட்டிக்ஸ்ல தான் இயங்குகிறது என்ற வசனத்துடன் பா ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் நடிப்பில் மனோஜ் மற்றும் சியாம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குதிரைவால்’ . இந்த படம் மார்ச் 18ஆம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது

இந்த உலகமே மேத்தமெட்டிக்ஸ்ல தான் இயங்குகிறது என்ற கான்செப்டை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகன் கலையரசனுக்கு திடீரென குதிரை வால் முளைத்தது என்பதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் அவருக்கு வரும் கனவுகள் மற்றும் கற்பனைகள் தான் என்ற படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது

கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையில், கிரிதரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.