close
Choose your channels

நடிகை சமந்தாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: இணையத்தில் வைரல்!

Thursday, February 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள வேற லெவல் ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் சுமார் 22 மில்லியன் ஃபாலோயர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் சமந்தா கடந்த சில நாட்களாக தினந்தோறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது வேற லெவல் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது பயிற்சியாளர் உடன் இணைந்து அவர் செய்த இந்த வொர்க் அவுட் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் ’சாகுந்தலம்’ மற்றும் ’யசோதா’ ஆகிய படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் அவர் ’தி ஃபேமிலிமேன்’ தொடர் இயக்குனரின் அடுத்த வெப்தொடரிலும் ஹாலிவுட் வெப்தொடரிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.