close
Choose your channels

பார்பி டாலை மிஞ்சும் அழகு… அசத்தும் முன்னணி நடிகையின் வைரல் போட்டோ ஷுட்!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் “கேடி” படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு “கல்லூரி” திரைப்படம் தமிழில் மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட இவர் தற்போது தெலுங்கு படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பழம்பெரும் தமிழ், இந்தி நடிகையாக இருந்த நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திலும் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறார். எப்போதும் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பதிவில், தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவதை பழக்கமாகக் கொண்டு உள்ளார். தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷுட் ஒன்றை எடுத்து அந்தப் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அதில் பார்பி டாலை போன்று பிங்க் நிற உடையணிந்த தமன்னா பார்ப்பதற்கு படு பிட்டாக, ஒரு பொம்மையைப் போலவே காட்சி அளிக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட இந்தப் புகைப்படம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறது. தமிழில் “தேவி“ திரைப்படத்திற்கு பிறகு முக்கியப் படங்கள் எதிலும் தலைக்காட்டாத தமன்னா நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க  உள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னாவின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.