close
Choose your channels

'ஜெயிலர்' செட்டில் இணைந்த தமன்னா.. வைரல் வீடியோ..!

Friday, February 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை தமன்னா இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரமுகர் ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி தமன்னா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமன்னா ’ஜெயிலர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோவை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இன்று மதியம் 12 மணிக்கு எடுக்கப்பட்டது என்பதும் இதில் இயக்குனர் நெல்சன் இருக்கும் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.