close
Choose your channels

சைக்கிளுக்கு மாறிய த்ரிஷா: பெட்ரோல் விலை உயர்வு காரணமா?

Monday, July 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா கடந்த 1999ஆம் ஆண்டு ’ஜோடி’ என்ற திரைப்படத்தின் மூலம் சிறு கேரக்டரில் அறிமுகமாகி அதன் பின் 2002ஆம் ஆண்டு ’மௌனம் பேசியதே’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியானார். அதன் பின்பு சுமார் 19 வருடங்களாக அவர் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இப்பொழுதும் அவர் 5 படங்களில் நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் த்ரிஷா அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிளில் உட்கார்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். நடிகை த்ரிஷா தற்போதும் 18 வயது சின்ன பெண் போல் ஸ்லிம்மாக இருக்கிறார் என்று இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் பெட்ரோல் விலை அதிகமாகி விட்டதால் சைக்கிளுக்கு மாறி விட்டீர்களா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ த்ரிஷாவின் இந்த புகைப்படம் சுமார் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.