close
Choose your channels

தாய்லாந்து நீச்சல் குளத்தில் வரலட்சுமி: செம வைரலாகும் வீடியோ!

Tuesday, August 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தாய்லாந்து நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி என்பதும் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக வரலட்சுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தாய்லாந்து சுற்றுலாவுக்கு சென்றுள்ள வரலட்சுமி அங்கிருந்தபடியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நீச்சல் குளத்தின் அருகே பிகினி உடையில் உட்கார்ந்திருப்பது உட்பட பல காட்சிகள் உள்ளன என்பதும் இந்த சுற்றுலாவை சிறப்பாக அமைத்துக் கொடுத்த நிறுவனத்திற்கு தனது நன்றி என்றும் தாய்லாந்து சுற்றுலாவை தன்னால் மறக்க முடியாது என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது சமந்தாவுடன் நடிக்கும் ’யசோதா’ உள்பட சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் வரிசையாக ரிலீசாக தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.