close
Choose your channels

காஜல் அகர்வால் அடுத்த படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்!

Thursday, January 23, 2020 • தமிழ் Comments

நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாக உள்ளார் என்றும், அவர் இயக்கும் முதல் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க உள்ளார்கள் என்றும், இந்த படம் ஒரு ரொமான்ஸ் காமெடி படமாக உருவாக இருக்கிறது என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வாலை தவிர இன்னொரு பிரபல ஹீரோயின் ஒருவர் நடிக்க உள்ளதாகவும் அவர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை’ மற்றும் ’செக்க சிவந்த வானம்’ போன்ற படத்தில் நடித்த அதிதிராவ் ஹைத்தி என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz