close
Choose your channels

ரூ.200 கோடி சாதனை ஒரு பக்கம் இருக்கட்டும், 'பீஸ்ட்' செய்த இன்னொரு சாதனை தெரியுமா?

Sunday, April 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் 200 கோடி வசூல் செய்த சாதனை ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் மற்றொரு சாதனை செய்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகி 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் ரிலீஸுக்கு முன்னரே உலகம் முழுவதும் பிரபலமானது என்பதும், இந்த பாடலுக்கு பல திரை உலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்கள் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பாடல் தற்போது மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது. யூடியூபில் இந்த பாடலுக்கு 6 மில்லியன் லைக்ஸ்கள் பெற்று உள்ள சாதனையோடு, இந்த பாடல் தற்போது 325 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய வீடியோ என்ற பெருமையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.