close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் கமல் படத்தில் வடிவேலு?

Tuesday, September 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் நடித்த சிங்காரவேலன், தேவர்மகன், காதலா காதலா ஆகிய படங்களில் அவருடன் இணைந்து நடித்த வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கமலஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன் அவர் மீண்டும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். கமலஹாசனே இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்த ’இம்சை அரசன் 23ம் புலிகேசி 2’ படத்தில் வடிவேலு நடித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து வடிவேலு விலகியதால் அந்த படத்தில் வாங்கிய அட்வான்ஸ் தொகைக்கு பதிலாக லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ’தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.