close
Choose your channels

அதுக்குள்ள 'அஜித் 63' அப்டேட்டா? சமூக வலைத்தளங்களில் தீயாய் கிளம்பும் வதந்தி!

Thursday, March 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தின் அப்டேட்டிற்காக வருடக்கணக்கில் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து அஜித் படத்தின் அப்டேட் வந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அப்டேட் என்ற பெயரில் வதந்திகளும் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

அஜித் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பதும், எச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கான பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்ட செய்தி வெளியானது.

இந்த நிலையில் திடீரென ’அஜித் 62’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்றும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டுகளால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு அஜித் 63 பட அப்டேட்டும் சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் வடிவேலு ஒரு முக்கிய நடிக்க இருக்கிறார் என ஒரு செய்தி பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தியாக இருந்தாலும், இந்த வதந்தி உண்மையானால் எங்களுக்கு மகிழ்ச்சியே என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.