close
Choose your channels

ஷங்கர் பட ஹீரோவின் அடுத்த படம்.. ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து இணைந்த ரத்னவேலு..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் தான் இசையமைக்கப் போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த படம் ’ஆர்சி 16’. இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் ஏஆர் ரஹ்மான் இசையில் புச்சிபாபு இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் ’கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு இணைந்துள்ளதாக இயக்குனர் புச்சிபாபு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். நேற்று ரத்னவேலு பிறந்தநாள் என்பதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த புச்சிபாபு, ‘உங்களுடன் இணைந்து பணி புரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தமிழில் ‘சேது’, ‘நந்தா’, ‘பகவதி’, ‘ஜெயம்’, ’வாரணம் ஆயிரம்’ ’எந்திரன்’ ’லிங்கா’ ’எதற்கும் துணிந்தவன்’ ’இந்தியன் 2’ உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.