close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': குவைத்தை அடுத்து மேலும் ஒரு நாட்டில் தடை!

Sunday, April 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது என்பதும் முதல் 3 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை குவைத் நாடு திடீரென தடை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழகத்திலும் ஒரு சில அமைப்புகள் ‘பீஸ்ட்’ படத்திற்கு தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் குவைத்தை அடுத்து கத்தார் நாட்டில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வெளியிட அந்நாட்டு அரசு தடை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தடை செய்யப்பட்ட நாடுகள் தவிர உலகம் முழுவதும் திட்டமிட்டபடி ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.