close
Choose your channels

மைனா நந்தினியை அடுத்து புதுக்கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்: எத்தனை லட்சம் தெரியுமா?

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் அடுத்தடுத்து புது கார் வாங்கி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் மைனா நந்தினி புதுக்கார் வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் புதிய கார் வாங்கி உள்ளார்.

விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்து விட்டாலே அவர் வாழ்க்கையில் செட்டிலாகி விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. சிவகார்த்திகேயன், சந்தானம் உள்பட பல பிரபலங்கள் தற்போது தமிழ் திரைலகிலும் புகழ் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் பிரபலங்களான ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மணிமேகலை, சரத், கேப்ரில்லா, மைனா நந்தினி உள்பட பலர் புதிய கார் வாங்கிய நிலையில் தற்போது பிக் பாஸ், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஜித் புது கார் வாங்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆஜித் டைட்டில் பட்டம் வென்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 91 நாட்கள் வரை தாக்குபிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஸ்கோடா ஸ்லாவியா என்ற காரை வாங்கியுள்ளதாகவும் இந்த கார் தனக்கு மிகவும் பிடித்த கார் என்றும் ஆஜித் கூறியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரு.22 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து புது கார் வாங்கிய ஆஜித்துக்கு பிக்பாஸ் சக போட்டியாளர்களான சோம்சேகர், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.