close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்துடன் மோதுகிறதா தனுஷ் படம்?

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே தேதியில் தனுஷின் அடுத்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் திரையுலகிற்கு உலக அளவில் புகழ் சேர்க்கும் படமாக ’பொன்னியின் செல்வன்’ படம் இருக்கும் என்பது சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரில் இருந்து தெரிய வருகிறது

’பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியான பிறகு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’நானே வருவேன்’ திரைப்படமும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியாகுமா? என்பது ‘நானே வருவேன்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.