close
Choose your channels

'PS1' வெற்றிக்கு பின் கார்த்திக்கு 'சர்தார்', ஜெயம் ரவிக்கு என்ன தெரியுமா?

Saturday, October 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படம் 100 வருட தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வெற்றியால் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது என்பதும் அவர்களுடைய அடுத்த படங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக ’பொன்னியின் செல்வன்’ வெற்றியை அடுத்து கார்த்தி நடித்துள்ள சர்தார்’ திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவியின் அடுத்த படம் ’அகிலன்’ என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’பொன்னியின் செல்வன்' வெற்றி காரணமாக இந்த படத்திற்கு மிகப்பெரிய புரமோஷனை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக சமீபகாலமாக பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதை அடுத்து ’அகிலன்’ படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தென் இந்தியாவில் உள்ள சில பகுதிகளுக்கும் படக்குழுவினர் சென்று புரமோஷன் செய்ய இருப்பதாக தெரிகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி நடித்த ’பூலோகம்’ திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.