பிங்க் பால் போட்டியில் ஜொலிக்குமா? புது நெருக்கடியில் இந்தியக் கிரிக்கெட் அணி!

உலகக் கோப்பை டெஸ்ட் தொடர் போட்டிக்கான நுழைவினைப் பெறும் நோக்கில் இந்திய அணி இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. இந்த நோக்கத்தை அடைய தற்போது 1-1 என்ற சமன் வெற்றிப் பெற்று இருக்கும் இந்திய அணி, அடுத்து நடைபெற இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை உறுதியாகப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இந்தியக் கேப்டன் விராட் கோலி அணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வந்து இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிகளின்போது சேப்பாக்கம் மைதானம் ஸ்பின் பவுலிங்கிற்குதான் ஏற்றது என்றும் வேகப்பந்துக்கு ஏற்ற விஷயங்கள் இதில் இல்லை என்றும் இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இந்த மைதானத்தில் ஸ்விங் ஆகும் விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன என்றும் இங்கிலாந்து வீரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

தற்போது 3 மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிகளுக்காக இரு அணிகளும் அகமதாபாத் செல்ல உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள “மோதேரா” மைதானத்தில்தான் அடுத்த 2 போட்டிகளும் நடைபெற உள்ள நிலையில் அந்த மைதானத்தைக் குறித்த சில தகவல்கள் தற்போது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

அதாவது மோதேரா மைதானத்தில் அடுத்த 2 போட்டிகளும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன. எனவே இதில் பிங்க் பந்து மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு பிங்க் பந்து போட்டிகளில் இந்தியக் கிரிக்கெட் அணி கடுமையாக சொத்திப்பி இருக்கும் நிலையில் தற்போது பிங்க் பந்து போட்டி நடைபெற இருக்கிறது.

மேலும் இந்த மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சில் படு திறமையாகச் செயல்படும் என்பதால் இந்திய அணிக்கு இது கடும் நெருக்கடியை உருவாக்ககலாம். இதனால் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகிய 2 ஸ்பின் பவுலர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் போட்டியில் இடம்பெற நினைக்கும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பிங்க் பால் போட்டி நெருக்கடியை உருவாக்கும் என்றே சிலர் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

More News

அஜித் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தது இதற்குத்தான்!

தல அஜித் சற்றுமுன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்.

'நண்பன்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தளபதி 65'

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான 'தளபதி 65' திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த பிறந்த நாள் பரிசு: அப்படி என்ன இருக்குது அதுல?

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தான் நடித்துக்கொண்டிருக்கும் 'டான்' படத்தின் குழுவினர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய போது 'டான்' படக்குழுவினர் கொடுத்த ஒரு பிறந்த நாள் பரிசை பார்த்து

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அஜித்: என்ன காரணம்?

அஜித் நடித்த வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மணி நேரமாக அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டாச்சு, அடுத்து யுவன் பாடலுக்கு போகலாமா? பிரபல தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'அயலான்' படத்தின் சிங்கிள் பாடலான 'வேற லெவல் சகோ' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.