close
Choose your channels

அஜித் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்தது இதற்குத்தான்!

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் சற்றுமுன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் ஏன் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார் என்பது தெரியவந்துள்ளது.

அஜித் தனது வீட்டிலிருந்து ரைபிள் கிளப் செல்வதற்காக கால் டாக்ஸியில் வந்துள்ளார். கால் டாக்சியில் உள்ள கூகுள் மேப் தவறான இடத்தை காட்டியதால் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளதாக தெரிகிறது

அஜித் உண்மையில் எழும்பூரில் உள்ள பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ரைபிள் கிளப்பிற்கு செல்லவிருந்தார். கூகுள் மேப்பை பார்த்து கால்டாக்சி டிரைவர் புதிய காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அஜித்தை அழைத்து வந்துவிட்டார்.

இதனை அடுத்து அஜித்திடம் இடமாறி வந்து இருப்பதாக காவல்துறையினர் அவரிடம் தெரிவித்ததோடு ரைபிள் கிளப் பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே உள்ளது என்று வழிகாட்டினர். இதனையடுத்து தனக்கு சரியாக வழிகாட்டியே போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிடையில்தான் பொதுமக்களும் போலீசாரும் அஜித் உடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.