close
Choose your channels

சிவகார்த்திகேயன் அடுத்த பட நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்?

Wednesday, March 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடித்த நிலையில் சிவகார்த்திகேயனின் 15வது படமான இயக்குனர் மித்ரன் இயக்கும் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு இதுவரை ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என்றாலும் அவர் தயாரித்த முதல் படமான 'கனா' படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சிவகார்த்திகேயனுக்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.