close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' டிரைலர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Friday, July 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ’திட்டம் இரண்டு’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பதும் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளை விசாரணை செய்யும் அதிகாரியாக நடித்துள்ளார் என்பதும் டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது

ஜூலை 30ஆம் தேதி என்ற திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த டிரைலருக்கு பிறகு இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஐஸ்வர்யா ராஜேஷ், பவல் நவகீதன், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், சுபாஷ் செல்வம், அனன்யா ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை விக்னேஷ் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் மேலும் ஒரு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.