close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர்.. விரைவில் ரிலீஸ்..!

Sunday, February 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’டிரைவர் ஜமுனா’ ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மற்றும் ’ரன் பேபி ரன்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் அவர் தற்போது ’துருவ நட்சத்திரம்’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்த மற்றொரு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் ’சொப்பன சுந்தரி’. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா, கருணாகரன், சதீஷ், மைம் கோபி, சுனில் ரெட்டி உள்பட பல நடித்துள்ளனர்.எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் அஜ்மல் இசையில் உருவாகிய இந்த படம் பாலமுருகன் ஒளிப்பதிவில் சரத்குமார் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலர் மிக விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் திரையரங்கு ரிலீஸ் தேதியும் டிரைலரில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.