close
Choose your channels

அஜித், அட்லி குறித்து காஜல் அகர்வால் கூறியது என்ன?

Sunday, March 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் ஏற்கனவே இருவர் குறித்து கூறிய ஒருசில கருத்துக்களை சமீபத்திய செய்திகளில் பார்த்தோம். இந்நிலையில் தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் அஜித், மற்றும் அட்லி குறித்து காஜல் கூறியதை பார்ப்போம்.

அஜித்தின் 'விவேகம்' படத்தில் தான் ஒரு தமிழ்ப்பெண்ணாக நடித்து வருவதாக கூறிய காஜல், கணவன் - மனைவி உறவின் பெருமையை போற்றும் வண்ணம் இந்த படத்தில் அஜித் மற்றும் தனது கேரக்டர்கள் அமைந்துள்ளதாக கூறினார். 'விவேகம்' குழுவினர்களுடன் பணிபுரிவதில் தான் பெருமை அடைவதாகவும், மிக விரைவில் பல்கேரியா சென்று படக்குழுவினர்களுடன் இணையவுள்ளதாகவும் கூறினார்

மேலும் 'விஜய் 61' படத்தை இயக்கி வரும் அட்லி குறித்து காஜல் கூறியபோது, 'அட்லி தனது படத்தில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பவர் என்பது அவரது முந்தைய படங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல் 'விஜய் 61' படத்திலும் என்னுடைய கேரக்டரை மிகவும் கூர்மையாக செதுக்கியுள்ளார். நீங்கள் ஒரு வித்தியாசமான காஜலை இந்த படத்தில் பார்ப்பீர்கள். துப்பாக்கி, ஜில்லா படங்களுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.