close
Choose your channels

சென்னை அண்ணா சாலையில் 'துணிவு' படப்பிடிப்பு.. அஜித் கலந்து கொண்டாரா?

Sunday, October 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் என்று பேட்ச்வொர்க் என்று கூறப்படும் சின்ன சின்ன காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டதாகவும் அஜித்தின் முகத்தில் மாஸ்க் போட்டு மறைத்து காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித், மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார் என்பதும் ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை பிரமாண்டமாக போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.