close
Choose your channels

அஜித்தின் அடுத்த சூறாவளி.. ஜிப்ரானின் மாஸ் அறிவிப்பு!

Tuesday, December 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்காக திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில் ’துணிவு’ படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழுவினர் முழுமையான அளவில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த படத்தின் முதல் பாடலான ’சில்லா சில்லா’ என்ற அனிருத் பாடிய பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த பாடல் வெளியாகி ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் 15 மில்லியன் பார்வையாளர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அஜித் படத்தின் அடுத்த சூறாவளி ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் ரிலீசுக்கு முன்பே மூன்று பாடல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.