close
Choose your channels

'நான் பார்த்த முதல் முகம்': 'வலிமை' அம்மா பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடலின் புரமோ வீடியோ இன்று இரவு 7 மணிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இ.ருந்தது. அதன்படி இந்த பாடலின் புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது.

நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ என அஜித்தின் குரலுடன் இந்த பாடல் ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் சித்ஶ்ரீராம் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் டிசம்பர் 5 ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.