close
Choose your channels

அஜித்தின் 'வலிமை' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படம் வெளியாகி 24 நாட்களே ஆகியிருக்கும் நிலையில் நாளை அதாவது மார்ச் 20ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகி குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆன பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தாலும் கடந்த சில மாதங்களாகவே அதைவிட முன்னதாகவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன.

அந்த வகையில் ‘வலிமை’ திரைப்படமும் நாளை ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘வலிமை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜி5 நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.