close
Choose your channels

அஜித்தின் விவேகம்: 4 நாட்கள் தமிழக மற்றும் உலக வசூல் நிலவரம்

Monday, August 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்ற போதிலும் சென்னையில் நான்கு நாட்களில் சாதனை வசூல் செய்தது என்பதை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் நான்கு நாள் தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'விவேகம்' திரைப்படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் சுமார் 47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.5.67 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரு.13 கோடியும், கோவையில் ரூ.8 கோடியும், திருச்சி-தஞ்சை பகுதியில் ரூ.4 கோடியும், சேலம் பகுதியில் ரூ.3.5 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த தொகை அஜித் படத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் முழுவதும் இந்த படம் கடந்த 4 நாட்களில் ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் ஒரு படத்தின் உண்மையான வெற்றி திங்கட்கிழமை வசூலை பொருத்துதான் என்று விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறுவதுண்டு. அந்த வகையில் இன்றைய வசூல் நிலவரம் எப்படி என்பது குறித்து நாளை பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.