close
Choose your channels

'வேதாளம்' டிரைலர் ரிலீஸ் தேதி.

Saturday, October 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' படத்தின் டீசர் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் உலக சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் நேற்று முன் தினம் வெளியாகிய 'வேதாளம்' படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், இந்த டிரைலர் வரும் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு வியாழக்கிழமை செண்டிமெண்ட் படி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்துள்ள லட்சுமிமேனன் இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் இணையதளங்களை தெறிக்க வைத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது வரும் 22ஆம் தேதி மீண்டும் 'தெறிக்க வைக்க டிரைலர் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.