close
Choose your channels

மீண்டும் ஐரோப்பா செல்லும் அஜித்-விவேக் ஓபராய்

Thursday, June 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தில் சர்வைவா பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் சுனாமியை கிளப்பிய நிலையில் இந்த படத்தின் டப்பிங் உள்பட அனைத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இரவுபகலாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அஜித், விவேக் ஓபராய் ஆகியோர் அடங்கிய 'விவேகம்' படக்குழு மீண்டும் செர்பியா நாட்டிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த முறை செர்பியாவில் படப்பிடிப்பு நடந்தபோது விவேக் ஓபராய்க்கு காயம் ஏற்பட்டதால் அஜித்துடன் அவர் நடிக்க வேண்டிய முக்கிய காட்சி ஒன்று படமாக்கப்படவில்லை என்றும் இந்த காட்சி திரைக்கதைக்கு முக்கியமானது என்பதால் மீண்டும் படக்குழுவினர் செர்பியா செல்லவுள்ளதாகவும் ,இந்த படப்பிடிப்பு ஒருவாரம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.